பெரு மரங்கள்


பெரிய மரக்கன்றுகளை  மாடியில் வளர்ப்பதற்கு 5 அடி நீளம் , 5 அடி அகலம் , 4 அடி உயரமுள்ள பிரத்யோகமாக  தயாரிக்கப்பட்ட சிமெண்ட் கான்கிரீட்டாலான அமைப்பு தேவை . இத்தகைய  அமைப்பிற்கு , கட்டட அஸ்திவாரத்திலிருந்து சிறப்பு பீம்கள் முறையே அமைக்கப்பட்டுஅதன்மேல் இத்தகைய  அமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும். இதிலும் தரை மட்டத்திலிருந்து 1 இஞ்சுக்கு மேல் அதிகபட்சம் 12 ஓட்டைகள் வரை இட வேண்டும். இத்தகைய தொட்டியின் உட்புறம் ஓட்டையின் மேல் சற்று மூடும் படியாக உடைந்த ஓடுகள், உடைந்த மண்தொட்டியின் பாகம் கற்கள் இவற்றை வைத்து 4 இன்ச் வரை ஆற்று மணலை நிரப்பி அதன் மேல் மாடிக்கேற்ற உரக்கலவையுடன் , ஒருபங்கு கரம்பை அல்லது செம்மண் கூடுதலாக சேர்த்துக் கொள்ள வேண்டும். இத்தகைய  தொட்டிகளில் தண்ணீர் கசிவு ஏற்படாதவாறு  பிரத்யோகமாக தயாரிக்க  வேண்டும். அதிகப்படி நீர் வெளியேறி போகும் வண்ணம் குழாய்கள் பொருத்தப்பட வேண்டும்.


இவ்வாறான அமைப்பில் வளர்க்க தேவையான மரங்களை பட்டியலில் அறியலாம் .


பலன்தரும் மரங்கள்

  • தென்னை 
  • பேரிச்டை 
  • ஈச்சை 
  • புளி
  • அத்தி 
  • பலா 


இலை ,பூ , அலகுமரங்கள்

  • கொன்றை மரவகைகள்
  • வாகை  மரவகைகள்
  • மந்தாரை மரவகைகள்


பாம்வகை

  • ராயல்பாம்
  •  கிளைப்பனை 
  • பிஸ்மார்க்கியா 
  • பெரிய   மீன்வால்பாம் 
  • பனை

  கொடிவகைகள்
 
இத்தகைய கொடிகள் வகைத் தாவரங்களை வளர்ப்பதற்கு 2 அடி உயரமுள்ள 1 1/2 அடி முதல் 2 அடி வரை அகல, நீளமுள்ள தொட்டிகள் , பாலிதீன் பைகள் , பிளாஸ்டிக் பைகள் , ட்ரம் ஆகியவைகளில் மாடிக்கேற்ற மண்ணை நிரப்பி தேவையான கொடிவகைகளை  நட்டு வளர்க்கலாம். இத்தொட்டி , பைகளின் மேல் தரையிலிருந்து 1 இன்ச் உயரத்தில் அதிகபட்சமாக 8 ஓட்டைகள் வரை இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும் .

இத்தகையஅமைப்பில் என்னென்ன கொடிகள் வளர்க்கலாம் என்பதை பின்வரும் பட்டியல் மூலம் அறியலாம்.

 இத்தகைய கொடியமைப்புகளை  மாடியில் கைபிடி சுவரின் மூலையில் வைக்கலாம். அப்போது சுவரில் பந்தல்கம்புகள், ஊன்றி பந்தல் போட்டு படர விடலாம் . பக்கவாட்டு பந்தல் அல்லது 6 அடி உயரதிற்கு மேலாக கயிறு பந்தல் அமைத்து படரவிடலாம். இதற்கான அமைப்பில் வளர்க்க வேண்டிய கொடிவகைகளை பின்வரும் பட்டியலில் காணலாம் .


கொடிவகைகள்

கீரைகள் 

  • முட்டகத்தான் 
  • முசுமுசுக்கை 
  • பச்சை பசலை 
  • சிகப்பு பசலை
  • பயன்படும் பாக்கொடி 
  • முல்லை பிச்சி 


காய்கறி 

  • புடல் 
  • பீர்கன் 
  • பாகல் 
  • சுரை 
  • கோவை 
  • அவரை 
  • பூசனி 

பழங்கள்

  • திராட்சை 
  • வெள்ளரி 
  • தண்ணீர் பூசனி 
  • முலாம் பழம் 
  • கிரினிப்பழம்


மூலிகை 

  • சீந்தில் 
  • கொடிவேலி
  • வேலிப்பருத்தி
  • கட்டுக்கொடி 
  • சர்கரைகொல்லி
  • ஆஸ்துமாகொடி
  • ஆடுதின்னாபானை
  • செம்புலியாரை 
  • மிளகு 
  • வென்னிலா 
  • வெற்றிலை 
  • திப்பிலி 


அழகுச்செடிகள்
  • ஜக்குடன்சியா
  • குயிஸ்காலிஸ்
  • ஸ்டிக்மோ பில்லன் 
  • வெர்னேனியா
  • பெட்ரியா 
  • இபோமிய 
  • மார்னிங் குளோரி 
  • சங்குப்பூ
  • ஆன்டிகோனன்
  • பாலாப்புளோரா 
  • துன்பர்ஜியா 
  • கிளிரோ டென்ரன்
  • லோனிசெரா
  • டெக்காமா 
  • பைரோஸ்டி ஜியா 
  • காகிதபூ 
  • பில்லோடென்ரன்       


கிழங்கு வகைகள்      

இவ்வாறான செடிகள்  கொடிகள் வகைக்கு 18 இஞ்ச்  உயரம் , 18 இஞ்ச் அகலம் , மற்றும் நீளம்  உடைய பைகள் , மற்றும் சாக்குகள் , பிளாஸ்டிக் ட்ரம், மண் தொட்டிகள்  ஆகியவற்றைப் பயன்படுத்தலாம் . கிழங்கு  வகைச் செடிகளுக்கு மாடிக்கேற்ற மண் கலவையுடன் 2 பங்கு ஆற்று மணல் கூடுதலாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும் . ஏனென்றால் மண் பொலபொலப்பாக இருந்தால் கிழங்குகள் நன்கு விளைந்து வரும். கேரட் , நூக்கோல் , டர்னிப் இவைகள் வளர்க்க சூரிய ஒளி சற்று  குறைவாகவும் காற்றின் ஈரப்பதம் சற்று  கூடுதலாக எப்போதும் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்

மேற்கண்டபடி தகவலமைப்பில் என்னென்ன கிழங்கு வகை பயிர்களை வளர்க்கலாம் என பின்வரும் பட்டியலில் பார்க்கலாம்.

கிழங்கு வகைகள் 

காய்கறிகள்
  • முள்ளங்கி 
  • பீட்ரூட் 
  • வெங்காயம் 
  • கேரட் 
  • நூல்கோல்
  •   டர்னிப்     


கிழங்குகள் 
  • நிலப்பனை கிழங்கு 
  • வள்ளக்கிழங்கு
  • சர்க்கரைவள்ளி 
  • மரவள்ளி 
  • சேனைக்கிழங்கு
  • கருணைக்கிழங்கு
  • சிறு கிழங்கு
  • சேப்பங் கிழங்கு
  • மஞ்சள் 


மூலிகை கிழங்குகள்
  • ஆகாச கருடன்  கிழங்கு
  • அமுக்கார கிழங்கு
  • கன்விலி பூ கிழங்கு
  • மருந்துக் கூர்க்கன்
  • வெள்ளை முசலி 
  • வசம்பு 
  • இஞ்சி 


அழகுச்செடிகள்

  • அடினியம் 
  • சைகஸ்
  • நொலினோ 
  • அஸ்பராகஸ் செசியோகஸ்    
  • அந்திமந்தாரை
  • லில்லிகிழங்கு 
  • பட்டிசுக்காஸ் 
  • கள்ளிவகை
  • ஜம்பங்கி